சபா ஊழலில் 9 பேர் தொடர்பு! UMS மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!

- Sangeetha K Loganathan
- 13 Jun, 2025
ஜுன் 13,
சபா மாநிலக் கனிமவள ஊழல் தொடர்பான ஆடியோவில் சபா மாநிலச் சபாநாயகர் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகச் சபா மாநிலப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகச் சபா மாநிலக் கனிமவள ஊழல் தொடர்பாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் SUARA MAHASISWA UMS மாணவர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சபா மாநிலக் கனிமவள ஊழலில் சம்மந்தப்பட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சபா மாநிலச் சபாநாயகரின் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.
சபா மாநிலக் கனிமவள ஊழலில் இருவர் மட்டுமே சம்மந்தப்பட்டிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், இது தொடர்பாக நீண்ட விசாரணையை SPRM மேற்கொண்டாலும் இருவரும் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் SUARA MAHASISWA UMS மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படாமல் சம்மந்தப்பட்ட 9 பேரும் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்க வேண்டும் என SUARA MAHASISWA UMS மாணவர் அமைப்பினர் கேட்டுக்கொள்வதுடன் அவர்களின் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.
SUARA MAHASISWA UMS mendedahkan sembilan nama, termasuk Speaker DUN Sabah, terlibat dalam skandal rasuah konsesi mineral Sabah. Mereka kecewa hanya dua individu didakwa oleh SPRM. Mahasiswa mendesak kesemua sembilan dipanggil ke mahkamah untuk siasatan lanjut.
1.Datuk Kadzim M Yahya (Speaker Dewan Undangan Negeri Sabah)
2.Datuk Ir. Shahelmey Yahya (Ahli Parlimen Putatan / ADUN Tg. Keramat / Timbalan Ketua Menteri III Sabah)
3.Datuk Masidi Manjun (ADUN Karanaan / Menteri Kewangan Sabah)
4.Datuk Masiung Banah (ADUN Kuamut)
5.Datuk Mohd Arsad Bistari (ADUN Tempasuk)
6.Datuk Dr. Yusof Yacob (ADUN Sindumin)
7.Datuk Rubin Balang (ADUN Kemabong)
8.Datuk Ariffin Mohd Arif (ADUN Membakut)
9.Datuk Andi Suryandy (Ahli Parlimen Kalabakan / ADUN Tg. Batu)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *