அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது; பினராயி விஜயனின் மகள் வீணா பதில்

top-news
FREE WEBSITE AD

திருவனந்தபுரம், ஜூன் 12 –

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், அமலாக்கத்துறை (ED) அனுப்பிய சம்மனுக்குப் பதிலளித்து, உடல்நலக் காரணங்களால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எக்சலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த வீணா விஜயன் மற்றும் கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவை என்ற பெயரில் முறைகேடாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கில் விளக்கம் பெறுவதற்காக வீணா விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, கொச்சியில் உள்ள அதன் மண்டல அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட நாளில் நேரில் ஆஜராக முடியாது என்று வீணா விஜயன் மின்னஞ்சல் மூலம் அமலாக்கத்துறைக்குப் பதில் அளித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் வேறுொரு தேதியில் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *