பி.கே.ஆரிலிருந்து விலகும் இந்தியர்கள்! கட்சிக்கு ஆபத்து! - RAFIZI எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

மே 13,

பி.கே.ஆர் கட்சிக்கு ஆதரவளித்து வந்த பெரும்பாலான இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் தொடர்ச்சியாகச் சரிவைக் கண்டு வருவதாகப் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் 85% க்கும் மேலான இந்தியர்கள் பக்காத்தான் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்திருப்பதாகப் பலரும் கருத்துகள் தெரிவித்தாலும் மடானி ஆட்சியில், குறிப்பாகக் கடந்த 2 ஆண்டுகளில் 38% இந்தியர்கள் மட்டுமே பி.கே.ஆர் கட்சியை ஆதரிப்பதாக DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார்.

 

பெரும்பாலான இந்தியர்கள் காலம் காலமாக பாரிசானுக்கு வழங்கி வந்த ஆதரவைப் பக்காத்தானை நம்பியதால் நமக்கு ஆதரவை வழங்கி வந்தனர். பெரும்பாலான இந்தியர்கள் வெளிப்படையாகப் பெரிக்காத்தானுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் வருகின்றனர். பாரிசானும் வேண்டாம், பெரிக்காத்தானும் வேண்டாம் என்கிற மனப்பான்மையில் இருந்த இந்தியர்கள், இப்போது பக்காத்தானும் வேண்டாம் என்கிற மனநிலைக்குக் கடந்த 2 ஆண்டுகளில் வந்துள்ளனர். பி.கே.ஆருக்கு இது தேர்தலில் பின்னடைவை அளிக்கும் என DATUK SERI RAFIZI RAMLI எச்சரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *