94.49% பதிவான ஜொகூர் தேர்தல்! முன்கூட்டியே வாக்களித்த அரசு ஊழியர்கள்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 8,

நேற்று ஜூலை 7 ஜொகூர் மாநிலத் தேர்தலில் அரசு முன்களப் பணியாளர்களின் முன்கூட்டிய வாக்குப் பதிவில் 19,471 வாக்குகள் பெறப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜொகூர் முழுவதும் 62 வாக்குச்சாவடிகளில் அரசு முன்களப் பணியாளர்கள் வாக்குகளைச் செலுத்தியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 வரையில் சுமூகமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குகள் பதிவாகியதாகவும் 94.49 விழுக்காடு வாக்குப் பதிவாகியிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

7,960 ராணுவ அதிகாரிகளும் 11,511 காவல்துறையினர்களும் முறையாக வாக்குகளைச் செலுத்தியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரும்பாலான பொதுமக்கள் வாக்கு செலுத்துவார்கள் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் 56 சட்டமன்றப் பகுதிகளிலும் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *