புங் மொக்தார் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

சபா, டிசம்பர் 5: கோத்த கினாபாலுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 1.46 மணியளவில், சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது  மறைவைத் தொடர்ந்து இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

 அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி துசுகி, மறைந்த கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருக்காக பிரார்த்தனை செய்து, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

 புங்கின் மரணச் செய்தியை அவரது மகன் நைம் குர்னியாவன் மொக்தார் இன்று முன்னதாக ஒரு பேஸ்புக் பதிவில் அறிவித்தார்.

 சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய புங், நேற்று மதியம் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 நவம்பர் 29 அன்று முடிவடைந்த 17வது சபா மாநிலத் தேர்தலில், ஆறு முனைப் போட்டியில் 153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அண்மையில் லாமாக் சட்டமன்ற தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *