முனிஸ்வரன் கோயில் சிலைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது! - சிலாங்கூர் காவல்துறை
- Shan Siva
- 25 Feb, 2026
ரவாங், பிப் 25: தாமான் ரவாங் பெர்டானாவில் உள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் கோயிலில் சிலைகளை இடமாற்றம் செய்யும் பணி இரவு முழுவதும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.30 மணி முதல் இன்று அதிகாலை 4.12 மணி வரை கோயில் நிர்வாகம் இடமாற்றப் பணிகளை மேற்கொண்டதாகவும், நான்கு சிலைகளையும் வளாகத்தில் இருந்து மாற்றியதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ சஷாலி கஹார் தெரிவித்தார்.
10 பக்தர்களும், கோயில் பிரதிநிதிகளும் இடமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இது காவல்துறை கண்காணிப்பின் கீழ் அமைதியாக நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.
கோயில் நிர்வாகத்தால் இடமாற்றப் பணி முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர், நில உரிமையாளர் இன்று அதிகாலையில் இடத்தை சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
செயல்முறை முழுவதும் நிலைமை சீராக இருந்தது என்றும், எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் சஷாலி கூறினார்.
அனைத்து தரப்பினரும் ஏற்கனவே உள்ள சட்ட வழிகளை மதிக்க வேண்டும் என்றும், இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டியது.
சமூக ஊடகங்களை காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், பொதுமக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான மத, இன அல்லது அரச (3R) விஷயங்களைத் தொடும் உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாகவும் சஷாலி மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



