மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
- Thinagaren Sanggaren
- 23 Oct, 2025
அக்தோபர் 23,
எதிர்வரும் அக்தோபர் 29, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் மாணவர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் மலாயாப் பல்கலைக்கழகக் கலை மற்றும் சமூக அறிவியல் புலத்தின் DKA அரங்கில் நடைபெறும். இக்கருந்தரங்கில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தான் ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெறும் என மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் ரவீந்திரன் மாரையா தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசியல் குறித்தான விரிவான கருத்தரங்கம் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களின் தலைமையில் நடைபெறும் என முனைவர் ரவீந்திரன் மாரையா தெரிவித்தார். இக்கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளர்களாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் பரமசிவம், நிதி அமைச்சின் மேனாள் பிரிவுச் செயலாளரான Dato Kumaran Santhivaloo ஆகியோர் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, இந்திய ஆய்வியல் கழகம், தான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடத்துவதாக முனைவர் ரவீந்திரன் மாரையா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
DR.MARIMUTHU AIYADURAI
Good event.



