"சூப்பர் மெக்னட் உற்பத்தி வசதி மேம்பாட்டுத் திட்டம் - மலேசியாவின் நிலையை வலுப்படுத்தும்!

top-news
FREE WEBSITE AD

ஜியோங்ஜு, நவ. 2

பகாங்கில் ஜே.எஸ் லிங்க், லைனாஸ் மலேசிய நிறுவனங்களால் மேம்படுத்தப்படும் 60 கோடி ரிங்கிட் மதிப்பிலான "சூப்பர் மெக்னட் எனப்படும் அதிக வலிமைக் கொண்ட காந்த உற்பத்தி வசதி மேம்பாட்டுத் திட்டம் மலேசியாவின் நிலையை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு அரிய மண் தாதுக்களுக்கான கீழ்நிலைத் தொழில்துறையில் புதிய ஆற்றலையும் உருவாக்கும்.

அவ்விரு நிறுவனங்களும் ஏற்கெனவே ஆரம்பகட்ட ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாகவும், நாளை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலை சந்தித்து, அத்திட்டம் குறித்த இதர விவகாரங்களை விவாதிக்க இருப்பதாகவும் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.முதலீடு, வாணிப, தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ரூல் தெங்கு அப்துல் அஸிஸ் நிலைமையை மதிப்பாய்வு செய்து கண்காணிப்பார்.

அதோடு, இது அரிய பூமி தாதுக்களை உள்ளடக்கியிருப்பதால், அதன் செயலாக்கம் சூப்பர் மெக்னட் எனப்படும் மிக உயர் வலிமைக் கொண்டதாக கருதப்படுவதால், அது ஒரு முக்கியமான முதலீடு என்று, தென் கொரியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள்கள் அலுவல் பயணம் முடிப்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கூறினார்.


ஜே.எஸ் லிங்க், அத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை கொள்முதல் செய்துவிட்டதாகவும், தங்களின் செயல்பாடுகளையும் தொடங்கவிருப்பதால், இது இனி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமல்ல என்பதையும் பிரதமர் விவரித்தார்.முன்னதாக, ஜே.எஸ் லிங்க் தலைமை நிர்வாக அதிகாரி, லீ ஜுன் யோங் மற்றும் லைனாஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ மாஷல் அஹ்மட் ஆகியோருடன் அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *