புத்ரா பாலத்தில் சூப்பர் பைக் சாகசம்! - இருவர் கைது
- Shan Siva
- 25 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 25: ஏப்ரல் 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பாலத்தில் சூப்பர்பைக்குகளில் பந்தயம் ஓட்டிய சம்பவம் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்ட சூப்பர்பைக் உரிமையாளர்களில் ஒருவர், விசாரணைக்கு உதவ முன்வந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சூரி ஈசா கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தக் குழுவினர் பந்தயத்தில் பங்கேற்பதற்காக மட்டுமல்லாமல், சமூக ஊடக உள்ளடக்கத்தைப் பதிவுசெய்து வெளியிடுவதற்காகவும் அந்த இடத்தில் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மஸ்ஜித் புத்ராவுக்கு அருகில் உள்ள அந்த இடத்தில், இந்தக் குழுவினர் கூடியிருப்பது இதுவே முதல் முறை எனத் தெரிகிறதுஎன்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
சூப்பர்பைக் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில், 31 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆண்களைக் காவல்துறை பின்னர் கைது செய்ததுடன், வைரல் வீடியோவில் காணப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தது. அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை அளித்த பின்னர், அதே நாளில் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் பலரைத் தற்போது தேடி வருவதாக சம்சூரி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



