நேர்மையான தூய்மை பணியாளருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

top-news
FREE WEBSITE AD

சென்னையை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் பத்மா. இவர் சென்னை தியாகராய நகர் பகுதியில் கடந்த 11ம் தேதி தூய்மைப் பணியில் பத்மா ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த குப்பைக்குள் ஒரு கவர் கிடந்தது. அந்த கவரில் 45 சவரன் தங்க நகைகள் இருப்பது பத்மாவுக்கு தெரிய வந்தது.

தனக்கு கிடைத்த அந்த 45 சவரன் நகைகளை அவர் உடனடியாக பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று ஒப்படைத்தார். இன்று தங்கம்  விற்கும் சூழலில் 45 சவரன் நகைகளை அப்படியே தனக்காக வைத்துக் கொள்ளாமல் போலீஸ் ஸ்டேஷனில் பத்மா ஒப்படைத்தது அவரது நேர்மைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

ஏழ்மையான நிலையிலும் தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் மக்கள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றது. இதையறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பத்மாவின் நேர்மையை பாராட்டினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் அழைத்து இன்று காலை பாராட்டியுள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் டாலருடன் தங்க செயின் ஒன்றை பத்மாவுக்கு பரிசளித்தார். மேலும் பத்மா மற்றும் அவரது குடும்பத்துடன் ரஜினி கலந்துரையாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *