பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு-ஆடவனுக்கு 16 ஆண்டுகள் சிறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 30-

ஐஎஸ் எனப்படும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த குற்றத்தையும் அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றத்தையும் ஒப்புக் கொண்ட வேலையில்லா நபருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஹஸ்புல்லா ஹசான் (வயது 46) எனும் அந்நபருக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த முதல் குற்றத்திற்காக பத்தாண்டுகள் சிறைத்தண்டனையையும் அந்த இயக்கத்துடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்த இரண்டாவது குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிபதி நூருல்ஹூடா நுராய்னி முகமது நோர் விதித்தார்.

அந்நபர் கைதுசெய்யப்பட்ட நாளான 2023ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அத்தண்டனையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று கோலாலம்பூரில் சமூக ஊடகம் மூலமாக அந்தப் பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை ஹஸ்புல்லா தமது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தான்.

இரண்டாவது குற்றத்தை 2024ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி அவன் புரிந்தான். ஜொகூரில் சிகாமட், பெல்டா பாலோங் தீமோர் தீகா எனும் இடத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்ட 143 புகைப்படங்களையும் மூன்று காணொளிகளையும் தன்னுடைய இரண்டு கைப்பேசிகளில் அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *