தாய்மொழிப் பள்ளிகளை ஆதரிப்பது பாஸ் கட்சியின் அரசியல் நாடகம்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஊத்தான் மெலிந்தாங், . 17-

பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதும், ஆலயங்களுக்குச் செல்வதும், சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளை ஆதரிப்பதும், இன-மதவாத பாஸ் கட்சியின் நாடகமே. அதில் பாஸ் கட்சியிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டிய இஸ்லாம் அல்லாதார், தாங்கள் தோழமையாளர்கள் என்ற நடிகர் கூட்டமாக சிலர் இருக்கின்றனர் என பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், இஸ்லாம் அல்லாதாரின் தலைவருமான சிவநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள மொத்தம் 13 மாநிலங்களில், மத-இனவாத பாஸ் கட்சி 4 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. ஒரே ஒரு மாநிலமான பினாங்கு மாநிலம் மட்டுமே இஸ்லாம் அல்லாதார் வசம் இருக்கிறது. அதுவும் பாஸ் கட்சியின் பக்கம் திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் முகமது ஹபிஸ் அலியாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதான், பாஸ் சுட்சியின் மத-இனவாத அரசியலுக்கு அடையாளம். இது முற்றிலும் இனவாதப் பேச்சு என்பது பூமிபுத்ரா மத்தியில் நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த 31.8.2025 இல் பேராக் அரசின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில சுல்தான் அஸ்லான் முஜூபிடின் ஷா முன்னிலையில் ஈப்போவில் அணிவகுப்பு நடைபெற்றது. அச்சமயம் அங்கு என்ன நடந்தது என்பதை நாடு தழுவிய நிலையில் அனைவரும் அறிந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மஞ்சோய் பாஸ் சட்டமன்ற உறுப்பினரும், விளைவுகளைப் பற்றி சற்றேனும் யோசிக்காத அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவருமான முகமது ஹபிஸ் அலியாஸ் அச்சம்பவத்திற்கு சீன மாது ஒருவர் காரணம் என்று உடனடியாக தனது முகநூல் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இறுதியில், அப்பெண் சீன சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றதால் அந்தப் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்புக் கோரினார் என்றும் சிவநேசன் சுட்டிக் கட்டினார். அச்சம்பவம் தொடர்பில் மாநில போலீஸ் தலைமையகம் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

பாஸ் கட்சியின் தோற்றம், இனம்-மதம் என்ற அடிப்படையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். பாஸ் கட்சியில் சேர்ந்துள்ள மலாய்க்காரர் அல்லாதார் அக்கட்சியை ஆள முடியாதவர்கள், கட்சித் தேர்தலில் போட்டியிடவோ அல்லது ஒட்டுப்போடவோ அங்கு உரிமை கிடையாது. வேண்டுமானால்
கூட்டத்தில் கைதட்டல் ஒலி எழுப்பலாம். அதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
சம உரிமையாகும். அம்னோவைப் பொறுத்தவரை மலாய்க்கட்சி என்று
நடத்தப்படவில்லை.

பூமிபுத்ரா என்னும் கொள்கையில், பல்லின மலேசியர்களின் மத்தியில் நல்லிணக்கத்துடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பங்காற்றி வருகின்றன என்றும் சிவநேசன் சொன்னார்.பாஸ் கட்சி நடத்தும் பாலர் பள்ளிகளில் தாய்மொழி தமிழ் மற்றும் சீன வகுப்புகளை நடத்தத் தயாரா என்று தமிழ் மலரில் ஜசெக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் விடுத்துள்ள சவாலுக்கு பாஸ் கட்சி இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. பாஸ் கட்சிக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் படித்த நபரும், வழக்கறிஞரும் பதில் அளிக்காதது குறித்து என்னென்று சொல்வது?

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *