உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு!
- Muthu Kumar
- 06 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 6-
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து கட்சியின் உச்சமன்றம் கூட்டாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் எந்தவோர் உள் குழப்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இதற்கு பெர்சத்து உச்ச மன்றம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளது. பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.இதில் அனைத்து உறுப்பினர்களும் சமீப காலமாக எழும் அனைத்து பிரச்சினைகளையும் முந்தைய சர்ச்சைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்.
இதனால் கட்சியின் கவனம் மக்கள் நலனிலும் தேர்தலுக்கான தயாரிப்புகளிலும் தொடர்ந்து இருக்கும்.கூட்டம் அமைதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்தது. அனைத்து உறுப்பினர்களும் விரைவில் ஒருங்கிணைந்த, வலுவான சபையாக மீண்டும் இணைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



