15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்து! பொதுமக்களும் சாட்சியம் அளிக்கலாம்! – காவல்துறை!
_11zon.jpeg)
- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
கிழக்கு மேற்கு JRTB நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்த நிலையில் சம்மந்தப்பட்ட பேருந்து போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதா என்பது குறித்தான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த விபத்தின் விசாரணையை மேற்கொள்ள சிறப்புப் பணிக்குழுவைத் தேசியக் காவல்படை அமைத்துள்ளதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட பேருந்து போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வரும்நிலையில் அது சம்மந்தப்பட்ட சாட்சியங்களைப் பயணிகளோ பொதுமக்களோ கொண்டிருந்தால் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி Datuk Seri Mohd Yusri Hassan Basri கேட்டுக்கொண்டார். இந்த விசாரணையில் சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு ஆணையமான M.I.R.O.S, போக்குவரத்து வாகனப் பாதுகாப்பு ஆணையமான PUSPAKOM, சாலை போக்குவரத்து சோதனை ஆணையமான J.P.J சுகாதார வேதியியல் நிறுவனமான A.P.A.D ஆகிய முக்கிய அரசு ஆணையங்களின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகப் புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
PDRM bersama agensi lain akan tubuh pasukan petugas khas siasat kemalangan maut di Gerik yang ragut 15 nyawa. Siasatan menyeluruh akan dijalankan termasuk latar belakang pemandu. Orang ramai diminta tampil bantu siasatan jika ada maklumat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *