அன்பின் முகமூடி - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

நாளைக்கு நீ மட்டும் நான் கூறும் இடத்திற்கு வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்ற குறுஞ்செய்தி மீராவின் இதயத்துடிப்பை அதிகரித்தது. அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. கடந்த சில மாதங்களாக புதிய எண்களில் இருந்து அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து மிரட்டல்களும் தவறான படங்களும் பாலியல் தொடர்பான வார்த்தைகளும் அவளைத் தொடர்ந்தன. எவ்வளவோ முயன்றும் அந்த நபரின் பிடியிலிருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை. மீரா கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகினாள். இச்சிக்கலை களைய மீரா ஒரு முடிவு எடுத்தாள். கடந்த நாட்களாக நடந்த அனைத்தையும் தன் காதலன் அருணிடம் கூறினாள். ஒரு நபர் தன்னை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரச்சொல்லுவதாக கூறினாள். இதைக் கேட்ட அருண் கோபமடைந்த்தான். அருணும் மீராவும் அந்த நபர் வரச்சொன்ன இடத்திற்க்கு செல்ல முடிவெடுத்தனர். மையான நபர் வரச்சொன்ன இடத்திறக்கு செல்ல முடிவெடுத்தனர். மையான அமைதியைக் கொண்ட ஒரு இருட்டு அறைக்குள் சென்றாள் மீரா. மீராவின் இதய துடிப்பு படபடவென அடித்தது. மேலும், அவளுக்கு சலசலவென வியர்க்க ஆரம்பித்தது. பின்புறமாக திரும்பி நின்றவாறு ஒரு நபர் உள்ளே வா என்று தடித்த குறளில் அழைத்தான். மீரா சட்டென்று உடைந்து போனாள். 

சில மாதங்களுக்கு முன்பு
, அருண் கயல் என்ற ஒரு பெண்ணை விரும்பினான். அவர்கள் இருவரும் உயிருக்கு உயிருக்காக நேசித்தனர். அருண் கயலை எப்பொழுதும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவான். கயலின் உழைத்தான். கனவுகளுக்காக அருண் அயராது நாட்கள் உருண்டோடின. கயல் அருணை அலச்சியம் செய்ய ஆரம்பித்தாள். கயலின் செயல் நாளுக்கு நாள் அருணை காயப்படுத்தின. இருப்பினும், அருன் அவற்றை பொருட்படுத்தாழல் அரவணைத்துக் கொண்டான். கயலை அன்பாக ஆனால், அருணின் அன்பும் அரவணைப்பும் அக்கறையும் மெல்ல மெல்ல கயலின் நினைவிலிருந்து மறைந்துபோயின. அருணை ஒரு பொருட்டாக மதிக்காமால் அவனை புரகணித்தாள் கயல். கயலின் இந்த மாற்றம் அருணை அதிகமாக காயப்படுத்தின. தன் உணர்வுகளை மதிக்காததால் மீராவின் மீது கொண்ட காதல் காலப்போக்கில் கோபமாகவும் வெறுப்பாகவும் மாறியது.

கயல் ஒரு நாள் "ஹாய்! எப்படி இருக்க?" என்ற குறுஞ்செய்தி அருணின் கைபேசிக்கு வந்தது. அருணும் "நான் நல்லா இருக்கேன்" என்று பதில் அனுப்பினான். அந்த பெண் தன் நண்பரிடம் பேசுவதாக எண்ணி உரையாடலைத் தொடர்ந்தாள். அருண் ஒருவர் தன்னை தவறுதலாக அவருடைய நண்பன் என்று எண்ணி பேசுகின்றார் என தெரிந்தும் விளையாட்டாக அருணும் உரையாடலை தொடர்ந்தான். பின்பு, அருண் அந்த பெண் மீராவிடம் உண்மையைக் கூறினான். அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த பெண் உடனடியாக உரையாடலை நிறுத்திவிட்டு அருணின் தொடர்பு எண்ணை ப்ளோக் செய்தாள். அந்த பெண்ணின் பெயர் மீரா. அருணுக்கு குற்றயுணர்ச்சி ஏற்பட்டது. வேறு ஒரு தொடர்பு எண்ணிலிருந்து மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டான். மன்னிப்புக் கேட்டான். மீராவும் புரிந்துக் கொண்டாள். அருண் மெல்ல மெல்ல மீராவின் அன்புக்கு அடிமையாகினான். கயலின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அருண் மனதில் இருந்து விலகிச்சென்றது. தேவைகளுக்காக தனது மட்டுமே அருணை தொடர்புக்கொள்வாள். இதை புரிந்துக்கொண்ட அருண் கயலிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டான்.

ஒரு நாள் பெரிய வணிக வளாகத்தில் அருண் மீராவோடு மிகவும் மகிழ்ச்சியாகக் கைகோர்த்து நடந்து வருவதைக் கயல் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தாள். ஓடிச் சென்று அருணிடம் பேச முயன்றபோது, அவன் - அவளைக் கண்டுகொள்ளாமல் முற்றிலும் அலட்சியம் செய்துவிட்டு மீராவோடு கடந்து சென்றான். கயல் மிகுந்த கோபத்திற்க்கு ஆளாகினாள். அந்த அவமானத்தை கயலால் தாங்கி கொள்ள முடியவில்லை. அருணின் இன்ஸ்டாகிராமை எப்படியோ லாகின் செய்து பார்த்தவள், அவர்கள் இருவரும் ஆழமாகக் காதலிப்பதை அறிந்து பொறாமையில் துடித்தாள். கயலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்படியாவது மீராவைப் பழிவாங்கத் துடித்த கயல், தன் நண்பன் ஒருவனுக்குப் பெருந்தொகையைக் காசு கொடுத்து, மீராவின் எண்ணை மிரட்டவும் பிளாக்மெயில் செய்யவும் ஏவினாள். பண ஆசையில் அந்த நண்பனும் கயலின் கொடூரத் திட்டத்திற்குச் சம்மதித்து, மீராவை ஒரு வாரம் முழுக்க நரக வேதனைக்குள்ளாக்கினான். அவன் மீராவை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதோடு பாலியல் தொடர்பான படங்களையும் அனுப்புவான்.

மேலும், ஒவ்வொரு முறையும் புதுப்புது எண்களிலிருந்து போன் வரும்போதெல்லாம் மீரா பயத்தால் நடுங்கிப்போனாள். கயலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அந்த நண்பன் போனில், "அருணைக் காதலிச்சது போதும் மீரா... நீ அவன்கூட சுத்துறது, பேசிக்கிறது எல்லாமே எங்களுக்குத் தெரியும். ஒழுங்கா அவனை விட்டு விலகிடு, இல்லைன்னா அருணை நாங்க என்ன பண்ணுவோம்னே தெரியாது; அவனுக்கு ஏதாச்சும் ஆபத்து ஆகிடும்!" என்று கொடூரமாக மிரட்டினான். அதுமட்டுமில்லாமல், "உன்னோட தனிப்பட்ட புகைப்படங்களும் நீங்க இரண்டு பேரும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கிட்ட எல்லா ரகசியங்களும் இப்போ எங்கிட்ட இருக்கு. நான் சொல்ற இடத்துக்கு நீ மட்டும் தனியா வரலையின்னா, இதை எல்லாருக்கும் அனுப்பி உன் மானத்தை ஏலம் விட்டிடுவேன்" என்று அந்தத் தடித்த குரல் தொடர்ந்து, அசிங்கமான வார்த்தைகளால் பிளாக்மெயில் செய்தது. தன் மேல் வரும் மிரட்டல்களை விட தன் காதலன் அருணுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்திலும், தன் புகைப்படங்கள் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற நரக வேதனையிலும்தான் மீரா செய்வதறியாமல் அழுதுகொண்டே அருணிடம் ஓடினாள்.

அங்கே இருட்டில் கேட்ட அந்தத் தடித்த குரல்
, மீராவின் காதுகளில் விழுந்த அடுத்த விநாடி, அவள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உறைந்து போனாள். அவளை இத்தனை நாட்களாகப் போனில் மிரட்டிய அதே "உள்ளே வா" என்ற வார்த்தைகள், இப்போது அவளுக்குள் பயத்திற்குப் பதிலாக ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது; ஏதோ அசம்பாவிதம் என நினைத்து மறைவிடத்திலிருந்து அருணும் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அந்த நபரை இறுக்கமாகப் பிடித்தான். ஆனால், அந்த அறையின் விளக்கை ஆன் செய்து வெளிச்சம் காட்டியபோதுதான் அந்தப் பயங்கரமான உண்மை வெளிவந்தது. அங்கே நின்றிருந்தது கயல் காசு கொடுத்து அனுப்பிய அந்த நபர் வேறு தம்பி! யாருமல்ல... அது மீராவின் சொந்தத் அந்த வெளிச்சத்தில் தன் தம்பியின் முகத்தைப் பார்த்த அடுத்த கணமே மீரா அப்படியே நிலைகுலைந்து, நெஞ்சு வெடிக்க அழுதுகொண்டே தரையில் உடைந்து விழுந்தாள்.

இத்தனை நாட்களாகத் தன்னை நரக வேதனைக்குள்ளாக்கி, ஆபாச வார்த்தைகளால் மிரட்டி, தன் நிம்மதியைக் கெடுத்தது தன் ரத்தப் பாசம்தான் என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவளது அழுகுரல் அந்த அறையையே உலுக்கியது. தன்னுடைய அக்கா அவளது அழுகுரல் அந்த அறையையே உலுக்கியது. தன்னுடைய அக்கா அருணைக் கட்டிப்பிடித்துக் கதறுவதையும், தான் இத்தனை நாட்களாக மிரட்டிப் பணியவைக்க நினைத்த அந்தப் பெண் தன் சொந்த அக்கா மீராதான் என்பதையும் உணர்ந்த தம்பி, இடிவிழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.


சுவேத்தாஷினி த/பெ சத்தியவேலு 
மின்னஞ்சல்: [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Divina

Nice story