UPSR, PMR இல்லாததால் SPRM மாணவர்களின் தரம் குறைந்துவிட்டதா? – கல்வி அமைச்சு மறுப்பு!
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2025
அக்தோபர் 22,
UPSR, PMR ஆகிய இரு தேர்வுகளும் நீக்கப்பட்டதால் SPM தேர்வில் மாணவர்களின் தரம் சரிந்துவிட்டதாக வெளிவரும் கூற்றுகளைக் கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh மறுத்தார். மாணவர்களுக்குத் தேர்வே இல்லை எனும்படியாகக் கருத வேண்டாம் என Wong Kah Woh வலியுறுத்தினார். UPSR , PMR தேர்வுகள் நீக்கப்பட்டவுடன் கல்வி அமைச்சு USSA தேர்வு முறைகளை அமல்படுத்தியது. இந்த USSA தேர்வு முறை என்பது மாணவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப பள்ளிகள் தேர்வை நடத்தும் என Wong Kah Woh நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
PMR தேர்வு ரத்து செய்து PT3 தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதும் PT3 தேர்வு ரத்து செய்யப்பட்டு USSA தேர்வு முறை இடைநிலைப்பள்ளிக்கும் பொருந்தும் என்பதால் இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக Wong Kah Woh தெரிவித்தார். கல்வியை முழுமையாகப் பெறாமல் இடையிலேயே கல்வியை விட்டு விலகும் மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தேர்வு முறைகளை மாற்றியமைத்ததாகவும் அதனால் பாதிலேயே கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் Wong Kah Woh சுட்டிக்காட்டினார். SPM தேர்வில் மாணவர்களின் அடைவுநிலை முந்தைய காலத்தைக் காட்டிலும் தற்போது சுமார் 1.5 விழுக்காடு உயர்ந்திருப்பதையும் கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh நினைவூட்டினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



