நமது நாட்டு அறிஞர்களை நமது நாட்டு எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச 15: முனைவர் மு.இளங்கோவன் எழுதிய தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா சண்முகம் நூல் வெளியீட்டு விழா நேற்று பிரிக்பீல்ட்ஸ் விஷாலட்சி உணவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
செந்தூல் முத்தமிழ் படிப்பகம், மலேசிய தமிழ் நெறிக் கழகம் ஏற்பாட்டில், மலேசிய பன்னாட்டு தமிழ் உறவு மன்றம் நடத்திய இந்நிகழ்ச்சியில், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும். மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்து நூலினை வெளியீடு செய்து வைத்தார். மேலும் முன்னாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
நூலினை மன்னர் மன்னன் திறனாய்வு செய்து பேசினார்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் தமிழ்நாட்டில் பிறந்து, மலேசியாவில் 40 ஆண்டுகள் இருந்து. தொல்காப்பியம் குறித்து தமிழ்த்தொண்டாற்றி சிறந்து விளங்கிய கோலாலம்பூரைச் சேர்ந்த தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகம் அவர்களைப் பற்றி தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மு.இளங்கோவன் சிறப்பான புத்தகம் உருவாக்கியிருப்பது நன்றிக்குரியது. அவரைத் தாம் பாராட்டுவதாகக் கூறினார். அதேவேளை, இது பொறாமையாக உள்ளது பெருமையாகவும் உள்ளது என்று தெரிவித்த அவர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த முயற்சியை மேற்கொள்ளாதது வருத்தமாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் குறைவாகவே வந்துள்ளனர். அவர்கள்தான் அதிக ஆதரவு வழங்க வேண்டும். ஆனால் வாசிப்பாளர்கள் நிறையவே வந்துள்ளனர் என்று அவர்களுக்குப் பாராட்டுகள் என ஓம்ஸ் பா.தியாக ராஜன் கூறினார்.
மேலும் இதுபோன்ற மலேசிய அறிஞர்களை நம் நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



