பள்ளியில் கொலை - படங்களைப் பகிர்வோருக்கு MCMC எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 15: மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான  MCMC, நேற்று 16 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தைப் பகிர்வது, மறுபதிவு செய்வது அல்லது பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

பிற மாணவர்கள் அல்லது கத்தியால் குத்தப்பட்ட இடத்தைக் காட்டும் எந்தவொரு உள்ளடக்கம் தொடர்பாகவும் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டால், அதை உடனடியாக நீக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது  என்று MCMC கூறியது.

பாதிக்கப்பட்டவரின் படங்கள் அல்லது வீடியோக்களை விநியோகிக்கும் செயல் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறுவது மட்டுமல்லாமல், நடந்து வரும் காவல்துறை விசாரணையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று ஓர் அறிக்கையில் MCMC குறிப்பிட்டுள்ளது.

தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் அத்தகைய உள்ளடக்கத்தை விநியோகிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் MCMC எச்சரித்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *