இருவர் படுகொலை-ஜெயக்குமார் விடுதலை!
- Muthu Kumar
- 19 Jul, 2025
ஜொகூர்பாரு, ஜூலை 19-
ஏழாண்டுகளுக்கு முன்பு ஜொகூர்பாரு, ஸ்கூடாய், தாமான் உங்கு அமினாவில் தனித்து வாழும் தாயான ஒரு பெண்ணையும் அவரின் தோழரையும் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தொழிலாளி ஒருவரை ஜொகூர்பாரு உயர்நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
எம்.ஜெயக்குமார் (வயது 39) என்ற அந்த ஆடவருக்கு எதிரான அவ்வழக்கில் முகாந்திரம் இருப்பதை பிராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க இயலாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அபு பக்கார் காதர் தெரிவித்தார்.
ஜெயக்குமார் ஏற்படுத்திய காயங்களினால்தான் கே.கமலா (வயது 51) மற்றும் எஸ்.சில்வராஜா (வயது 59) ஆகியோர் மரணமடைந்தனர் என்பதை நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறி விட்டது என்று நீதிபதி கூறினார்.
தாமான் உங்கு அமீனாவில் உள்ள ஜாலான் ஹங் ஜெபாட்டில் அடுக்குமாடி வீடொன்றில் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மாலை 7மணிக்கும் நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 3மணிக்கும் இடையில் கமலாவையும் சில்வராஜாவையும் கொலை செய்ததாக ஜெயக்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



