உரிமை கட்சியின் மாநாடு! இளைஞர்களின் பங்கு அவசியம்!
- Thinagaren Sanggaren
- 24 Nov, 2025
நவம்பர் 24,
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர்
பேராசிரியர் ராமசாமியின் தலைமையில் இயங்கும் உரிமை கட்சியின் இரண்டாவது மாநாட்டில்
இளைஞர்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும்
என உரிமை கட்சியின் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.மார்கஸ் ராஜ் தெரிவித்தார்.
நவம்பர் 30 ஷா அலாமில் அமைந்திருக்கும் IDCC மண்டபத்தில்
நடைபெறவிருக்கும் உரிமை கட்சியின் இரண்டாவது மாநாட்டிற்கு நாட்டின் எதிர்கால
நம்பிக்கையான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தேசிய நீரோட்டத்திலிருந்து இந்திய
சமூகம் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில் இளைஞர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க கூடாது
என்றும் மார்கஸ் ராஜ் கேட்டுக்கொண்டார்.
இந்த 68 ஆண்டுகள் ஜனநாயக ஆட்சியில் நாம் சாதித்தது என்ன என்று கேட்டால், ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல முடியும். இதற்கெல்லாம் ஒரே வழி , அடுத்த தலைமுறையின் நம்பிக்கை என சொல்லப்படும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நம் சமுதாயதின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும் என மார்கஸ் ராஜ் தெரிவித்தார்.
இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொள்ளாமல் அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற புரிதலுக்கு இளைஞர்கள் வர வேண்டும். இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்று முழங்கிய இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூற்றுக்கு ஏற்றவாறு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தூய அரசியலை மலேசிய மண்ணில் கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உரிமைக் கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டுக்கு அதிகமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று திரு. மார்கஸ் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



