அகதியான ம.இ.கா! கூட்டணியிலிருந்து வெளியேறும் துணிச்சல் விக்னேஸ்வரனுக்கு இருக்கிறதா? – PROF RAMASAMY!
- Thinagaren Sanggaren
- 11 Aug, 2024
ம.இ.கா பாரிசான் பக்காத்தான் கூட்டணியில் நீடிப்பதால் ஒரு பயனும் இல்லை என உரிமை கட்சியின் தலைவரான பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
பாரிசான் பக்கத்தான் கூட்டணியில் ம.இ.கா ஒதுக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் ம.இ.கா துணிச்சலாகச் செயல்பட்டு, கூட்டணியிலிருந்து வெளி வந்து ம.இ.கா உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறுமா? ம.இ.கா கூட்டணியிலிருந்து வெளிவர அதன் தலைவர் தான்.ஸ்ரீ விக்னேஸ்வரனுக்குத் துணிச்சல் இருக்கிறதா என பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்!
ஒற்றுமை கூட்டணிக்கு ம.இ.கா ஆதரவளித்தாலும் தேர்தல் குறித்தானக் கலந்தாலோசனைகளில் MCA க்கு வழங்கப்படும் முன்னுரிமை கூட ம.இ.காவுக்குப் பாரிசான் வழங்கப்படுவதில்லை என்பதால் இது நாள் வரையில் அனாதையாக இருந்த ம.இ.கா தற்போது அகதியாக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உரிமை கட்சியின் தலைவரான பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



