சூர்யாவின் 50 வது பிறந்தநாள்-வீட்டு மாடியிலிருந்து ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சூர்யாவின் 50 வது பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரண்டிருந்தனர். வீட்டின் மாடியிலிருந்து ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கையசைத்து நன்றி தெரிவித்தார்.சூர்யாவின் சினிமா தொடக்கத்தில் விமர்சனங்கள் வந்த போதிலும் 'நந்தா' படத்தில் மெருகேறிய அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு அவர் மாடியிலிருந்து கையசைத்து நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் பதாகைகள், பூக்கள் மற்றும் வாழ்த்துகளுடன் உற்சாகமாகக் கூடியிருந்தனர். அந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது திரைப்படங்கள் மூலம் சமூக கருத்துகளை வெளிப்படுத்துவதோடு, சமூகப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார். சூர்யா 2008ல் தொடங்கிய அகரம் பவுண்டேஷன், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயிற்சி, மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் இந்த பணிகள் அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக ஆர்வலராகவும், கல்வியாளராகவும் உயர்த்தியுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *