ஈரான் ராணுவத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய யூனியன் முடிவு!
- Muthu Kumar
- 30 Jan, 2026
ஈரானின் மிக வலிமையான ராணுவப் பிரிவான 'ஈரானிய புரட்சிகர காவல் படை' அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
ஈரானில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின்போது அந்த நாட்டுப் பாதுகாப்புப் படையினர் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் சுமார் 6,373 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கலாஸ், "ஒருவர் பயங்கரவாதியைப் போலச் செயல்பட்டால், அவர் பயங்கரவாதியாகவே நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அல்-கொய்தா, ஹமாஸ் மற்றும் ஐஎஸ் (ISIS) போன்ற அமைப்புகளுக்கு இணையான ஒரு பயங்கரவாதக் குழுவாக ஈரானின் இந்த ராணுவ அமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கருதப்படும்.ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளும் இதற்கு ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும்.
ரஷ்யாவிற்குப் போர் ஆயுதங்களை வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் உள்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, ஈரான் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க இந்த முடிவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



