ரஜினிக்கு நடிப்பு சொல்லி கொடுத்த குரு நாராயணசாமி உயிரிழந்தார்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே.எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கே.எஸ்.நாராயணசாமி: புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்தார் கே. எஸ். நாராயணசாமி. பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார். இந்திய திரைப்பட உலகில் பல முன்னணி நடிகர்களை உருவாக்குவதிலும், குறிப்பாக ரஜினிகாந்திற்கு நடிப்பு கற்றுக்கொடுத்தது இவர் தான்.

ரஜினி மீது அளவில்லா அன்பு வைத்திருந்த இவர், இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்தாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் மட்டுமின்றி, அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி,ராதாரவி உள்ளிட்ட பல்வேறு உச்ச நட்சத்திரங்களுக்கும் பல இயக்குநர்களுக்கும் இவர் பயிற்சி கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில், கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) நேற்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. அவரது உடல் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில்,நடிகர் ரஜினிகாந்த், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *