வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் பேருந்து விபத்து! ஒருவர் பலி; 18 பேர் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 11: இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 18 பேர் காயமடைந்தனர்.

சிலாங்கூர், பாங்கி அருகே நெடுஞ்சாலையின் 293.4 கி.மீட்டரில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஒரு சைன்போஸ்டில் மோதியது.

இது தொடர்பாக அதிகாலை 2.57 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.

இறந்தவர் 59 வயதுடைய ஆண் பயணி என்றும், அவர் சிக்கிக் கொண்டு பின்னர் மருத்துவ பணியாளர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் முக்லிஸ் கூறினார்.

காயமடைந்த 18 பயணிகளும் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக சிகிச்சை பெற்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *