தொழிலதிபர் கென்னத் ஈஸ்வரன் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் (MAICCI) முன்னாள் தலைவர் கென்னத் ஈஸ்வரன் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 65.

சமீப ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஈஸ்வரன், நேற்று காலை சுமார் 7 மணியளவில் பாண்டாய் மருத்துவமனை, பங்சாரில் காலமானார் என்று MAICCI தலைவர் என். கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.

உடல்நலக்குறைவு காரணமாக மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை காஜாங்கில் உள்ள கண்ட்ரி ஹைட்ஸில் அமைந்துள்ள அவரது  இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று கோபாலகிருஷ்ணன் கூறினார்.

ஈஸ்வரன் 2000 முதல் 2004 வரை MAICCI தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 2008 முதல் மேலும் 10 ஆண்டுகளுக்கு அந்த அமைப்பை வழிநடத்த மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தொழிலதிபர்கள், ர்சியல் பிரமுகர்கள் உட்பட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் நஜிப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் எப்போதும் தனது யோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி வந்தார், என்று குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *