மே 27 ஆம் தேதி ஹஜ்ஜு பெருநாள்!
- Shan Siva
- 18 May, 2026
கோலாலம்பூர், மே 17: மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் மே 27 அன்று ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடுவார்கள் என ஆட்சியாளர்கள் மாநாட்டின் தற்காலிக உதவிச் செயலாளர் முஹம்மது அஃபெண்டி ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு RTM ம்மில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிவிப்பில், ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு 1-ஆம் தேதி இன்று தொடங்கும் என அவர் அறிவித்தார். மாட்சிமை தங்கிய மாமன்னரின் கட்டளையை நிறைவேற்றும் வகையிலும், மாண்புமிகு ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும், ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளரின் சார்பாக ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு 1-ஆம் தேதியனது முறைப்படி மே 18 ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது என்பதை இதன்மூலம் அறிவிப்பதாக அவர் கூறினார்.
எனவே, ஹிஜ்ரி 10-ஆம் தேதி வரும் ஹரி ராயா ஐடில் அதா, மலேசியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் 2026, மே 27, புதன்கிழமை அன்று வரும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



