இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஈகோவை ஒதுக்கி வையுங்கள்! தாராளமாக வரவேற்கிறோம்! - அக்மால் சலே
- Shan Siva
- 05 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 5: இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட அம்னோ தலைவர்கள் கட்சி மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தங்கள் ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவர்
அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களின் மேல்முறையீடுகளை
பரிசீலிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று அக்மால் சுட்டிக்கட்டினார்.
கட்சி
அனைவருக்கும் பொதுவானது, நாம் மீண்டும்
ஒன்று சேர வேண்டும். கட்சியை வலுப்படுத்த அவர்கள் நமக்குத் தேவை என்று அவர் கூறினார்.
சஸ்பெண்ட்
செய்யப்பட்ட முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஹிஷாமுடின் ஹுசைனை மீண்டும் கட்சியில்
வரவேற்க வேண்டும் என்று செம்ப்ரோங் அம்னோ முன்வைத்த தீர்மானம் குறித்து அவர் இவ்வாறு
கருத்து தெரிவித்தார்.
ஹிஷாமுடின்
மட்டுமல்ல, கைரி ஜமாலுதீன்
மற்றும் ஷாரில் ஹம்டான் போன்ற பிற முன்னாள் தலைவர்களும் மீண்டும் கட்சிக்குத்
திரும்புவதற்கு உதவவும் தாம் தயாராக இருப்பதாக அக்மல் கூறினார்.
ஒழுக்கமாக இருந்தவர்கள் நாம் மறக்க முடியாத வழிகளில் பங்களித்தனர். அதனால்தான் அம்னோவில் ஒற்றுமை மிக முக்கியமானது என்றும், ஒற்றுமை ஒரு பக்கத்திலிருந்து மட்டும் வர முடியாது என்றும் தாம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்!
Ketua Pemuda UMNO, Dr. Akmal Saleh menyeru bekas pemimpin UMNO yang digantung atau dipecat agar ketepikan ego demi perpaduan parti. Beliau sedia bantu tokoh seperti Hishammuddin, Khairy dan Shahril kembali, demi memperkukuh UMNO secara bersama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



