ரஷ்யா விமான விபத்து! - அன்வார் வருத்தம்

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, ஜூலை 25: ரஷ்யாவில் நடந்த விமான விபத்து குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்தத் துயரச் சம்பவம் குறித்து தாம் மிகவும் வருந்துவதாகவும், அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற நேரங்களில், வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பது உணர்த்தப்படுகிறது என்று கூறினார்.
ரஷ்ய மக்களுக்கு மலேசியா தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது. அதில்  பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *