மலேசியாவின் வளர்ச்சிக்கு நிலைத்தன்மை, விவேகமான நிதி மேலாண்மை முக்கியம்!
- Muthu Kumar
- 25 Sep, 2025
டிலி, செப். 25
மலேசியாவின் வளர்ச்சிக்கு நிலைத்தன்மை, விவேகமான நிதி மேலாண்மை மிகவும் முக்கியமாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மலேசியாவின் அரசியல் நிலைத் தன்மை, விவேகமான நிதி மேலாண்மை ஆகியவற்றைப் பேணுவதற்கான திறன், பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் உதவியுள்ளது.
கல்வி, நிறுவனங்கள், எரிசக்தித் துறைகளில் சீர்திருத்தங்களுக்கும், இலக்கவியல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவின் இயக்கிகளுக்கும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் முக்கிய அடித்தளங்கள் ஆகும்.திமோர் லெஸ்தே டிலியில் மலேசிய புலம்பெயர்ந்தோருடனான மடானி சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல் நிலைத்தன்மை மலேசியாவை பிளவுகளை உருவாக்காமல் படிப்படியாக சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அனுமதிக்கிறது.சீர்திருத்தங்கள் கடுமையாகவோ அல்லது அவசரமாகவோ மேற்கொள்ளப்படவில்லை.புத்திசாலித்தனமாக செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



