2018ஆம் ஆண்டு முதல் 1 எம் டி பி முறைகேடுகளில் இருந்து புத்ராஜெயா 2970 கோடி வெள்ளியை மீட்டெடுத்துள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 15-

1எம்டிபி சொத்துக்கள் மீட்பு அறக்கட்டளை கணக்கு 2018ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுடன் இணைக்கப்பட்ட வெ. 2970 கோடிகளை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பண்டார் துன் ரசாக் எம். பி. டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா வான் இஸ்மாயிலுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மீட்கப்பட்ட தொகையில் வெ. 1090 கோடி 2022, 30 ஜூன் 2025க்கு இடையில் திரட்டப்பட்டதாக அது கூறியது. ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி, வெ.4217 கோடி கடன் கொடுப்பனவுகள், நிறுவன கடமைகளுக்காக 11எம்டிபிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் நிதி அமைச்சகத்தின் வெ.1544 கோடி பங்கு நிறுவன முன்பணம் அல்லது கடன்களில்
இணைக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட 1எம்டிபி சொத்துகளிலிருந்து மேலும் வெ.2673 கோடி வந்தது. மொத்தம் வெ. 2893 கோடிகள் 1எம்டிபியின் அசல் கடனை திருப்பிச் செலுத்த
பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெ.1324 கோடிகள் வட்டி, பிற கடமைகளை உள்ளடக்கியது.

தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி, எஸ்ஆர்சி நிதிகளை மீட்டெடுப்பது அனைத்துலக ஒத்துழைப்பு, சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான, நீண்ட செயல்முறையாக உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்து கடன்கள் மற்றும் கடமைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்க்க வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அது வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *