மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் உதவி போலீஸ் மற்றும் போலீஸ் அறை!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், செப்.16-

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கல்வி அமைச்சின் முயற்சிகளில் பள்ளிகளில் உதவி போலீஸ் அதிகாரியை நியமிப்பது மற்றும் போலீஸ் அறையை அமைப்பதும் அடங்கும்.

பள்ளியில் நிலவும் பகடிவதை பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முயற்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளைத் தங்கள் அமைச்சு இறுதி செய்வதற்கு முன்பு, அவை ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

"இதுவரை நாங்கள் அனைவரின் கருத்தையும் பெற்று வருகிறோம். குறிப்பாக, பள்ளியின் பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவில் நாங்கள் செயல்படுத்தும் கருத்துகள். இரண்டாவது. நாங்கள் தற்போது செயல்படுத்தி வரும் பாதுகாப்பு தணிக்கை செயல்பாடு. அதுபோல தான் நாங்கள் தற்போது கருத்துகளைச் சேகரித்து வருகிறோம். பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோதா குறித்து விசாரிக்க நாங்கள் சட்ட அமைச்சு மற்றும் தொடர்பு அமைச்சருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்". என்றார் அவர்.

பினாங்கு, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, 2025ஆம் ஆண்டு மடானி பல்கலைக்கழகத்திற்கு முந்தைய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

பள்ளிகளில் அதிகரித்து வரும் பகடிவதை பிரச்சினையைக் கட்டுப்படுத்த, பள்ளிகளில் உதவி போலீஸ் அதிகாரி மற்றும் போலீஸ் அறைகளைக் கல்வி அமைச்சு உருவாக்க வேண்டும் என்ற பலரின் கருத்துகள் குறித்தும், நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபட்லினா கருத்துரைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *