சாலையின் எதிர்திசையில் பயணித்த பள்ளி வேன்!

top-news

ஏப்ரல் 9, 

சாலையில் பள்ளி சிற்றூர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி சாலையின் எதிர்திசையில் பயணிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்துவதாகவும் வடக்கு Seberan Perai மாவட்டக் காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார். நேற்று நண்பகல் 1 மணிக்கு BUTTERWORTH சாலையில் சம்மந்தப்பட்ட வேன் ஓட்டுநரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாக அவர் தெரிவித்தார். 

70 வயது வேன் ஓட்டுநர் உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு விரைந்தள செல்ல எண்ணியதால் எதிர் திசையில் வேனைச் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். சம்மந்தப்பட்ட 70 வயது முதியவரைச் சுகாதாரப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Seberan Perai மாவட்டக் காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார்.

Seorang pemandu van sekolah berusia 70 tahun memandu di arah bertentangan di Butterworth kerana masalah kesihatan. Polis telah menahannya untuk siasatan. Tiada kemalangan berlaku dan pemandu dihantar ke hospital untuk pemeriksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *