22 மாணவர்களுடன் விபத்துக்குள்ளான பள்ளி வேன்! 3 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் காயம்!
- Sangeetha K Loganathan
- 07 Jul, 2025
ஜூலை 7,
கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநரும் வேனிலிருந்த 3 பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர். இன்று நண்பகல் 1 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் TEBRAU அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக TEBRAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Muhamad Azizi Zakaria தெரிவித்தார். விபத்தின் போது வேனில் 22 பள்ளி மாணவர்கள் இருந்ததாகவும் 45 வயதுடைய பெண் ஓட்டுநர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் 1 ஆண் மாணவரும் 2 பெண் மாணவர்களும் காயமடைந்திருப்பதாகவும் TEBRAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Muhamad Azizi Zakaria தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் பழுதடைந்த லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் TEBRAU தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வேன் ஓட்டுநர் மேலதிகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் TEBRAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Muhamad Azizi Zakaria தெரிவித்தார். விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் பயத்தில் கதறியதால் அங்கு பதட்டமானச் சூழல் நிலவியதாகவும் விரைந்து வேனிலிருந்த பள்ளி மாணவர்களை மீட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டதாகவும் TEBRAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Muhamad Azizi Zakaria தெரிவித்தார்.
Sebuah van sekolah membawa 22 murid terlibat dalam kemalangan apabila hilang kawalan lalu merempuh belakang lori rosak di TEBRAU. Seorang pemandu wanita dan tiga murid sekolah Tamil cedera. Semua mangsa menerima rawatan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



