ஆசிரியர்கள் புகைப்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறையும் RM10,000 அபராதமும்! – கல்வி அமைச்சர்!
- Thinagaren Sanggaren
- 12 Aug, 2025
ஆகஸ்ட் 12,
பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகைப்பிடித்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek எச்சரிக்கை விடுத்தார். பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் செயல்படுவதைக் கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுவதால் சில முக்கிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக Fadhlina Sidek தெரிவித்தார்.
பள்ளிகளிலும் பள்ளி வளாகங்களிலும் புகைப்பிடிப்பதைத் தடைசெய்திருந்தாலும் ஆசிரியர்களிடத்தில் புகைப்பிடித்தல், குறிப்பாக மின்சிகரெட்டுகளின் பயன்பாடுகள் இருப்பதால் குறைந்தப்பட்சம் 2 ஆண்டுகள் சிறையும் குறைந்தது RM10,000 அபராதமும் அல்லது இரண்டும் விதிக்க கல்வி அமைச்சு முடிவெடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவூட்டினார். இந்த நடவடிக்கைக்கு எந்தவொரு சட்டத்திருத்தமும் அவசியமில்லை என்றும் முந்தையச் சுகாதாரக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கையைப் பள்ளிகளில் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



