மூத்த எழுத்தாளர் ந.வரதராசன் மறைவு! தான்.ஸ்ரீ.குமரன் இரங்கல்!
- Thinagaren Sanggaren
- 31 Dec, 2025
டிசம்பர் 30.
நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான ந.வரதராசன் அவர்கள் காலமானது மிகவும் வருத்தமளிப்பதாக மேனாள் துணை அமைச்சர் தான்.ஸ்ரீ.குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். பள்ளிக் காலத்து நண்பரும் இலக்கியவாதியையும் நான் இழந்துவிட்டேன் என உருக்கமாக தான்.ஸ்ரீ.குமரன் இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தான்.ஸ்ரீ.குமரன் அவர்களின் இரங்கல் பின்வருமாறு -
வணக்கம். இனிய நண்பர் சிறுகதை சிற்பி, கப்பளா
பத்தாஸ் ந.வரதராசன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறேன். 1952ஆம்
ஆண்டில் நண்பர்கள் அசன்கனி, த.லெ.இராமலிங்கம் ஆகியோருடன் தமிழ் ஏழாம் வகுப்பு
பயின்றபோது ஏற்பட்ட நட்பு எழுபத்து மூன்று
ஆண்டுகள் தொடர்ந்தது. நாட்டின் சிறந்த
சிறுகதை எழுத்தாளராக வலம் வந்தவர். அவரது
இரண்டு மூன்று நூல்களை தலைமையேற்று வெளியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கி
சிறப்பித்தவர். நல்ல நண்பர்.
பழகுவதற்கு இனியவர். ஒத்த வயதுடையவர். முதுமை, நோய், தூரம்
காரணமாக அடிக்கடி சந்திக்க இயலாமல் போய்விட்டது. நடமாட சிரமம். மருத்துவமனைவாசம்
இறப்பில் கலந்துகொள்ள இயலவில்லை. சிறந்த பண்பாளர். அவர் காலத்தில் சிறுகதை
வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும். இளமையில், அறுபது ஆண்டுகளுக்கு
முன், குறிப்பாகத் தமிழர் திருநாள், மணிமன்றம், தமிழர்
சங்க இயக்கங்களில் அவருடன் இணைந்து சேவையாற்றிய அந்த இனிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். மனம்
கலங்குகிறது. அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது
ஆதன் அமைதியுற இறைவன் திருவடிகளைப் போற்றுகிறேன்.
இரங்கல், பள்ளித்
தோழன் தான்ஸ்ரீ குமரன்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



