ஹம்ஸா தலைவராக வந்தாலும் பெர்சத்துவில் பிரிவுகளை ஒழிக்கவே முடியாது!
- Muthu Kumar
- 26 Oct, 2025
கோலாலம்பூர், அக். 26-
டான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்குப் பிறகு பெர்சத்து தலைவர் பதவியை ஹம்ஸா ஸைனுடின் ஏற்பாரேயானால், அதனால் பெர்சத்துவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவுகள் மேம்படையும். ஆனால், பெர்சத்து கட்சியில் தற்போது இருந்து வரும் பிரிவுகளை முற்றாக ஒழித்துக் கட்டிவிட முடியாது.
பெர்சத்துவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளின் வேர்கள்."சரிசெய்ய முடியாத அளவுக்கு ஆழமாகப் பதிந்துவிட்டன என்று தோன்றுவதாக, நுசாந்தாரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மற்றும் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அமாட் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் "மோதல்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“இந்த இரண்டு "வாள்களும்" ஹம்சாவின் முகாமில் இருப்பதால் ஒன்று நீக்கப்பட்டு மற்றொன்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முஹிடினோ அல்லது ஹம்சாவோ பெர்சத்துவை வழிநடத்தினாலும், உட்கட்சிப் பிரச்சினையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்று அஸ்மி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முஹிடினுக்கு பதிலாக பெர்சத்து தலைவராக ஹம்ஸா வந்தால், அது பெரிக்காத்தான் நேஷனலுக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும், தனக்கு மிகவும் பொருத்தமானவர் என்று பாஸ் கருதும் ஹம்ஸாவுடன் சேர்ந்து பணியாற்ற பாஸ் தயாராகவும் இருக்கிறது என்று அவர் கூறினார்.
"ஹம்ஸாவுடன் பேசுவது பாஸ் கட்சிக்கு மிகவும் சுலபமாக இருக்கும். முஹிடினோ தாம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று பிடிவாதமாக இருப்பவர்.''எனினும், வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற இருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சத்து கட்சியில் தலைமைத்துவ மாற்றம் நடப்பது சாத்தியமற்றது என்று அஸ்மி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



