புதிய பதிப்பு வந்தாலும், தற்போதைய MyKad ஐ உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை! - உள்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 8: ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய பதிப்பு MyKad வந்தாலும், தற்போதைய MyKad வைத்திருப்போர் உடனடியாக அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் MyKad வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தாலும், புதிய பதிப்பு அறிமுகமானவுடன் அதை உடனே மாற்ற வேண்டும் என்ற சட்ட அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.

தற்போது 2 கோடிக்கும் அதிகமான மலேசியர்கள் MyKad பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் அவசரமாக தேசிய பதிவுத்துறைக்கு (JPN) சென்று MyKad மாற்ற தேவையில்லை.
புதிய பதிப்பு அறிமுகமானதும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று சட்டம் கூறவில்லை  என்றார்.

இன்று ஜொகூர் பாருவில் உள்ள Bangunan Sultan Iskandar சுங்க, குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகம் மற்றும் புகிட் சாகார் நிலையத்தில் Johor Bahru–Singapore RTS Link திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதை தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *