8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆபாசக் காணொலிகள்! விசாரணை மேற்கொள்ளப்படும்! - Datuk Fahmi Fadzil
- Thinagaren Sanggaren
- 14 Sep, 2025
செப்டம்பர் 14,
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் செனட்டர்கள் என மொத்தம் 8 அரசியல் தலைவர்கள் தொடர்பான ஆபாசக் காணொலிகள் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்திருப்பதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil உறுதிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவின் மூலமாகப் போலியா அந்த காணொலிகள் உருவாக்கப்பட்டிருப்பதைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC உறுதிப்படுத்தியிருப்பதாக Datuk Fahmi Fadzil இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மின்னஞ்சல்
மூலமாக அந்த காணொலிகள் சம்மந்தப்பட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்
செனட்டர்கள் என மொத்தம் 8 அரசியல் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்த காணொலிகளைப்
பரப்ப வேண்டாம் என்றால் 100,000 அமெரிக்க டாலர்கள் (RM420,000)
வழங்க வேண்டும் என மிரட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்
தமக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் பெற்றதைப் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்
அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாக அறிவித்திருந்த
நிலையில் அவரை அடுத்து SUBANG நாடாளுமன்ற உறுப்பினர் Wong
Chen, SUNGAI PETANI நாடாளுமன்ற உறுப்பினர் Dr.
Taufiq Johari, HANG TUAH JAYA நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர் விளையாட்டுத்
துறை அமைச்சருமான Adam Adli, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும்
Kota Anggerik சட்டமன்ற உறுப்பினருமான Najwan Halimi, செனட்டர் Manolan Mohamad, கூலிம் சட்டமன்ற உறுப்பினர்
Wong Chia Zen , சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr
Fahmi Ngah என மொத்தம் 8 பேர் மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்றிருப்பதாக
தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil உறுதிப்படுத்தினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



