பாலியல் காணொலிகளைப் பரப்பிய இருவருக்குச் சிறையும் அபராதமும்!

top-news

ஜூன் 1,

பிரபலங்களின் பாலியல் காணொலிகளைச் சமூகவலைத்தளங்களின் மூலமாக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கோலாலம்பூர் Majistret நீதிமன்றத்தில் தங்கள் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். முக்கிய பிரமுகர்களின் பாலியல் காணொலிகள் என போலி காணொலிகளைச் சமூகவலைத்தளங்களில் பரப்பியும் குறிப்பிட்ட சில VIP-களுக்கு விற்பனை செய்தும் வந்த 32 வயது ஆடவரும் 26 வயது ஆடவரும் கடந்த ஏப்ரல் 10 Kuala Kubu Baharuவில் உள்ள ஒரு தனியார் கேளிக்கை மையத்தில் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட இருவரின் கைத்தொலைப்பேசிகளில் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரபலங்களின் போலி பாலியல் காணொலிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று உள்ளூர் ஆடவர்களான இருவரும் தங்கள் மீதானக் குற்றங்களை Majistret நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில் RM 7,000 அபாரதம் விதிக்கப்படுவதுடன் 4 மாதங்கள் சிறையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dua lelaki ditahan kerana menyebar dan menjual video seks palsu melibatkan selebriti di media sosial. Mereka mengaku bersalah di Mahkamah Majistret Kuala Lumpur dan dihukum penjara empat bulan serta denda RM7,000 setiap seorang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *