முகைதீனால் அதிகம் சிரமத்துக்குள்ளாகினேன்! - Vincent Tan!
- Sangeetha K Loganathan
- 20 Nov, 2024
நவம்பர் 20,
பிரபலத் தொழிலதிபரும் மலேசியாவின் 29 ஆவது பணக்காரருமான Tan Sri Vincent Tan, முகைத்தீனால் அதிகமானச் சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது 5G நெட்வோர்க் திட்டத்தை மலேசியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் திட்டம் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு தாம் வலியுறுத்தியதாகவும் அதனை முகைதீன் அங்கீகரித்திருந்தால் பல மில்லியன் ரிங்கிட் மிச்சமாகியிருக்கும் என அவர் தெரிவித்தார்.
தமது கனவு திட்டமாகவும் U Mobile 5G நெட்வொர்க் தற்போதைய மடானி அரசாங்கம் அங்கீகரித்துள்ள நிலையில் இதன் மதீப்பிடு 2021 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பயனாக அமைந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வரி பணத்தைக் கொண்டு டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் முகைதீனின் எண்ணம் அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் இழப்பை அதிகரிக்கும் என்றும், அரசாங்கத்தின் பணத்தைச் செலவிடாமல் முதலீடு செய்வதன் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரிக்கும்படியாகத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் தற்போதைய U Mobile 5G நெட்வொர்க் திட்டமும் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டும்படியனத் திட்டம் என Tan Sri Vincent Tan விளக்கமளித்தார்.
Vincent Tan, mengkritik kerajaan pimpinan Muhyiddin Yassin kerana bertegas melaksanakan rangkaian tunggal 5G oleh Digital Nasional Bhd (DNB) menggunakan dana awam, walaupun pengendali telekomunikasi sebelumnya bersedia melaksanakannya dengan perbelanjaan sendiri
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *