வீசா இருந்தாலும் வெளிநாட்டினர்களுக்கு எந்தவொரு விலக்கும் இல்லை! உள்துறை அமைச்சு உறுதி!
- Thinagaren Sanggaren
- 17 Aug, 2025
ஆகஸ்ட் 17,
வெளிநாட்டினர்கள் வீசா வைத்திருந்தாலும் அவர்கள் வெளிநாட்டினர்களாகவே நடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் DATUK SERI SAIFUDDIN NASUTION விளக்கமளித்தார். சிறப்பு வீசா, வணிக வீசா, உயர்தர வீசா, திருமணத் தம்பதியர் வீசா என எந்தவொரு வீசா வைத்திருந்தாலும் அவர்கள் மலேசியாவின் சட்டத்தை மீறவோ அமைதிக்கு எதிராகவோ, வணிகத்தில் ஈடுபடவோ அனுமதியில்லை என உள்துறை அமைச்சர் சைபூடின் நசுதியூன் தெரிவித்தார். இது நாட்டின் இறையாண்மையுடன் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் அவர்கள் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றியாக வேண்டும் என DATUK SERI SAIFUDDIN NASUTION வலியுறுத்தினார்.
வெளிநாட்டினர்களின் பின்புலத்தைக் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது என DATUK SERI SAIFUDDIN NASUTION தெரிவித்தார். எனக்கும் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டினர்கள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுக் காணும்படி அழைப்பு வந்தாலும் தாம் முழுமையாக அப்படியான வலியுறுத்தல்களை நிராகரிப்பதாகவும் முறையான ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே வீசா ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக DATUK SERI SAIFUDDIN NASUTION விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



