தான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு RM 7,000! – நாளை இறுதி நாள்!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 9, 

மலேசியாவின் பாரம்பரியமிக்க பழம்பெரும் சங்கங்களில் குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியச் சங்களில் ஒன்றான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுப் போட்டிக்கான இறுதி நாள் நாளை (10.07.2025) என நினைவுருத்தப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் எழுத்தாளர்  சங்கமும் தான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கல்வி உபகார நிதி நிறுவனமும் இணைந்து இப்புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி வருகிறது. இப்போட்டி ஒவ்வோர் ஆண்டுக்கும் ஓர் இலக்கிய வகை நூல் தேர்வு செய்யப்படவிருக்கும் நிலையில் இவ்வாண்டுக்கானப் போட்டியில் கடந்த 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாவல்கள் இப்போட்டிக்காக அனுப்பி வைக்கலாம் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.மோகனன் பெருமாள் தெரிவித்தார்.

நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு நூலில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் நூல்  அச்சு வடிவில் வெளியிடப்பட்டவையாக இருத்தல் அவசியம் என்றும் இப்போட்டிக்கான முதல் பரிசு சான்றிதழுடன் RM 7,000 என்றும்  4 நூல்களுக்குச் சிறப்புப் பரிசாகத் தலா RM500 ரிங்கிட்டும் சான்றிதழும் வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10.07.2025 ஆம்  தேதிக்குள் எழுத்தாளர் சங்கத்தின் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். D/A Persatuan Penulis Penulis Tamil Malaysia. D-2-12 Putra Majestic Business Center. Jalan Kasipillay off Jalan Sultan Azlan Shah, 52100 Kuala Lumpur.  Tel :+60177008981

 Malaysia Tamil Writers’ Association mengingatkan tarikh akhir penyertaan Pertandingan Hadiah Buku Tan Sri V. Manickavasagam 2025 ialah esok, 10 Julai 2025. Penyertaan terbuka kepada novel terbitan 2020-2024. Hadiah utama RM7,000 beserta sijil, manakala empat hadiah saguhati RM500 setiap satu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *