வெனிசுலா பயணங்களைத் தவிர்க்கவும்! - மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 7: தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவசியமற்றப் பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு மலேசியர்களை வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில்,  அண்மைய  நிலவரங்களால் எந்த மலேசியரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என   உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனவரி 4 அன்று வெளியிடப்பட்ட கடைசி அறிவிப்புக்குப் பிறகு, வெனிசுலாவில் உள்ள மலேசியர்களின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராக்காஸில் உள்ள மலேசியத் தூதரகம், அங்கு பதிவு செய்துள்ள மலேசியர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.

வெனிசுலாவின் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,  மேலதிக தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *