பிரமோஸ் இருக்கு முட்டாள் மாதிரி பேசக்கூடாது-பாக் பிரதமருக்கு ஓவைசி கடும் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய ஒரு சொட்டு தண்ணீரை இந்தியா நிறுத்தினாலும் பாடம் கற்பிக்கப்படும்'' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் ''முட்டாள் மாதிரி பேசக்கூடாது. எங்களிடம் பிரமோஸ் ஏவுகணை இருக்கு. உங்களின் மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் பயப்படாது'' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஏப்ரல் 24ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக சிந்து நதி தான் இருக்கிறது.

சிந்து நதியை நம்பித்தான் அந்த நாட்டில் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. சிந்து நதி நீரை முறைப்படி திறக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது. ஆனால் நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் முழுமையாக பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு மறுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அவ்வப்போது நம் நாட்டை மிரட்டி வருகின்றனர். குறிப்பாக சிந்து நதி நீர் விவகாரத்தில் தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது அவர் சிந்து நதி நீர் விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது நம் நாட்டுக்கு மிரட்டல் விடுத்தார்.  ''பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய ஒரு சொட்டு தண்ணீரை கூட எதிரியால் பறிக்க முடியாது. எங்களின் தண்ணீரை நிறத்துவதாக நீங்கள் மிரட்டலாம். அதற்கான முயற்சியை மேற்கொண்டால் பாகிஸ்தான் உரிய பதிலடி தரும். பாகிஸ்தான் உங்களுக்கு பாடம் புகட்டும் என்பதை மறக்க வேண்டாம்'' என்று வாய்க்கொழுப்பில் பேசினார்.

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் லோக்சபா தொகுதியின் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஓவைசி கூறியதாவது: நம்மிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. பாகிஸ்தானின் 9 விமானப்படை தளங்களை நாம் தாக்கியபோது நீச்சல் உடையில் அவர்  இருந்துள்ளார். அவர் முட்டாள் தனமாக பேசக்கூடாது. ஏனென்றால் அவர் ஒரு நாட்டின் பிரதமர். இத்தகைய மிரட்டல்கள் ஒருபோதும் இந்தியாவை அச்சுறுத்தாது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை சரிசெய்வதற்கு பதிலாக நம்மை அச்சுறுத்துகிறார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஒருபோதும் வேலை செய்யாது. போதும் போதும்'' என பதிலடி கொடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *