ஜொகூர் தேர்தலில் ஆதரவு குறையவில்லை – பேராக் டிஏபி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 13-

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி ஆதரவை இழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை பேராக் டிஏபி மறுத்துள்ளது.

அதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள், நான்கு தொகுதிகளை இழந்திருந்தாலும், கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் அதிகரித்துள்ளதாக காட்டுகின்றன என பேராக் டிஏபி தெரிவித்துள்ளது.

நேற்று முகநூலில் வெளியிட்ட பதிவில், ஜொகூரில் டிஏபி வைத்திருந்த 10 தொகுதிகளில், கட்சி கூடுதலாக 66,823 வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 159,769 வாக்குகள் கிடைத்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 226,592 ஆக உயர்ந்துள்ளது.

இது 41.8 விழுக்காடு அதிகரிப்பாகும் என பேராக டிஏபி விளக்கியது.

“ஜொகூரில் டிஏபி வாக்காளர்களை இழக்கவில்லை. மாறாக, எங்களுக்கு அதிகமான ஆதரவு கிடைத்துள்ளது. எங்கள் ஆதரவாளர்கள் காணாமல் போனதால் நாங்கள் தோற்கவில்லை; எதிரணி தங்களின் ஆதரவை மேலும் திறமையாக ஒன்றிணைத்ததால் தோல்வி ஏற்பட்டது,” என அந்தப் பதிவில் கூறப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *