வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
இன்று அதிகாலை Kampun Rawa Rawa குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 வயது பெண் கடுமையானத் தீ காயங்களுக்குள்ளனாதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Rosliee Suyut தெரிவித்தார். அதிகாலை 6 மணிக்குத் தீ விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் 14 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட 53 வயது மீட்கப்பட்டதாக சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Rosliee Suyut தெரிவித்தார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 53 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபாயக் கட்டதைத் தாண்டியிருப்பதாகவும் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Rosliee Suyut தெரிவித்தார். சம்மந்தப்பட்ட வீடு 100% முழுமையாகத் தீயில் கருகியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Rosliee Suyut உறுதியளித்தார். தீயணைப்பு அதிகாரிகள் காலை 8.27 மணிக்குத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்ள் ஆய்வு செய்து வருவதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Rosliee Suyut தெரிவித்தார்.
Seorang wanita berusia 53 tahun cedera parah akibat kebakaran rumah di Kampung Rawa Rawa awal pagi tadi. Rumah musnah sepenuhnya, namun tiada kematian dilaporkan. Punca kebakaran sedang disiasat oleh pasukan forensik bomba.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *