காட்டில் காணாமல் போன பெண்! 7 மணிநேரத்திற்குப் பின் மீட்பு!

top-news

ஜூலை 8, 


காட்டில் சுற்றி வருவதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்த பெண் காணாமல் போன நிலையில் 7 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை 4 மணியளவில் பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்திடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்து மாலை 4.30 மணிக்குத் தேடுதல் பணியைத் தொடங்கியதாக Lutong மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Henry Jugah தெரிவித்தார். 

மீரியில் உள்ள Everwin Pujut 7 காட்டுப் பகுதியில் அவர் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட காட்டுக்குள் மாலை 6.30 மணி வரையில் மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்ட நிலையில் மாலை 6.40 மணிக்கு வனத்துறை, STORM பாதுகாப்புப் படையினர் உதவியையும் பெற்றதாக Lutong மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Henry Jugah தெரிவித்தார். 60 வயது பெண் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவிலுள்ள காட்டுப் பகுதியில் இரவு 11.20 மணிக்கு அவரை மீட்டதாக Lutong மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Henry Jugah தெரிவித்தார். உடலில் சில சிராய்ப்புக் காயங்களுடன் அவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மீரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக Lutong மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Henry Jugah தெரிவித்தார்.


Seorang wanita berusia 60 tahun yang hilang semasa bersiar-siar di hutan Everwin Pujut 7 ditemui selamat selepas tujuh jam operasi mencari dan menyelamat. Mangsa mengalami luka ringan dan dihantar ke Hospital Miri untuk rawatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *