லாரி பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள்! இளம்பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அவசர பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை 6.32 மணிக்கு விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.
எரிவாயு தீர்ந்ததால் 34 வயது ஆடவரின் லாரி நெடுஞ்சாலையின் அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னிருந்து வந்த 22 வயது இளம்பெண்ணின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 22 வயது இளம்பெண் உயிரிழந்ததாகவும் 34 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita maut selepas motosikal ditunggangnya merempuh belakang lori yang berhenti di lorong kecemasan Lebuhraya Utara-Selatan berhampiran Muar. Lori berhenti kerana kehabisan minyak, tetapi mangsa melanggar bucu kanan belakang lori dan meninggal dunia di tempat kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *