அரசியலில் பெண்களுக்கான ஒதுக்கீடுகளைப் பி.கே.ஆர் உறுதிச் செய்யும்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 28,

அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோலா லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினரும் பி.கே.ஆர் தேசிய மகளிர் குழு உறுப்பினருமான UMANANTHINI GNANAPRAGASAM வலியுறுத்தினார். நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலில் 30% பெண் வாக்காளர்களை ஏற்றுக்கொண்டாலும் தேர்தல் தொகுதிப் பங்கீடுகளின் போது பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதாக UMANANTHINI தெரிவித்தார்.

அதேவேளையில் தலைமைத்துவமிக்க பெண்களையும் நாம் உருவாக்க வேண்டும் என்பதில் பி.கே.ஆர் கட்சி மும்முரமாகச் செயல்பட்டு வருவதாகவும் UMANANTHINI தெரிவித்தார். பெண்களுக்கான ஒதுக்கீடுகள் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் இதனை முன்னெடுக்க வேண்டும். அதற்கு பெண்கள் அரசியலில் ஈடுபடவும் தேர்தல் அரசியலுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என UMANANTHINI தெரிவித்தார். இதன் முயற்சியாக நாடளாவிய நிலையில் பெண்களுக்கான அரசியல் விழிப்புணர்வுகளை அதிகரிக்கவும் அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் செயல்பாடுகள் முன்னெடுக்கவிருப்பதாக UMANANTHINI நம்பிக்கை தெரிவித்தார். 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

P.UMANANTHINI GNANAPRAGASAM

Well said